மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் வெளியாகியுள்ள கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் திட்டங்கள்..
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்
- சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
- 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
- கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
- ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
- ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.
- கிராமப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு; 2021-22ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைப்பது உறுதிசெய்யப்படும்.
- 79,395 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
- 27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.
- ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2,000 கோடி செலவிடப்படும்.
- இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.
- மாநிலத்திலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த 'தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' ஏற்படுத்தப்படும்.
- ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி.
- விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலவு குறைவாகவும் கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்