Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்: மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட் 2021-2022-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இதோ..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. அத்துடன் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட்டும் இதுவே.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில் காலை 10 மணி அளவில் சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது
  • நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும்
  • தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்
  • தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
  • பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்
  • அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்
  • அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்
  • வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்
  • தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ. 5கோடி ஒதுக்கீடு
  • கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்
  • தேசிய கடற்சார் நிறுவனம் உதவியுடன், சங்க கால துறைமுகங்கள் அமைந்திருக்கும் இடங்களில் கடல் ஆய்வுகள் நடத்தப்படும்
  • கீழடி, சிவகளை, கொடுமணல் அகழாய்வு இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்
  • அரசு இடங்களை அடையாளம் காண ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு மேற்கொள்ளப்படும்
  • தமிழக பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 14,317 புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
  • தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
  • விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்
  • சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு
  • நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு
  • உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு
  • புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும்
  • தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்
  • ரூ.111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் உறுதி
  • கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.9,370.11 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.
  • தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்
  • நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு
  • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150கோடி நிதி ஒதுக்கீடு
  • புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
  • மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்
  • இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்
  • 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
  • ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
  • 79,395 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவர் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்
  • 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்
  • ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • 2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்
  • கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
  • ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்