தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
"தேசிய கடற்சார் நிறுவனம் உதவியுடன், சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த இடங்களில் கடல் ஆய்வுகள் நடத்தப்படும். கீழடியில் கிடைத்தப் பொருட்களை வைத்து திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதிகளில் நடக்கும் ஆய்வுகள் தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. கீழடி, சிவகளை, கொடுமணம் அகழாய்வு இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும். தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும். மாநிலம் முழுவதும் நவீன நில ஆய்வு மேற்கொள்ளப்படும்" என நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்