Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தீபாவளிக்கு சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதியில்லை - மதுரை காவல் ஆணையர் உத்தரவு

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரையில் சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி இல்லை என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைப்பதற்கு விண்ணப்பிக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14 வகையான ஆவணங்களை இணைத்து, 1000 ரூபாய் கட்டணத்துடன் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

image

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின்பு தான் உரிமம் வழங்கப்படும் எனவும், காலக்கெடு நீட்டிப்பு செய்ய இயலாது எனவும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர பட்டாசுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்