Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

அதி கனமழை பெய்யும் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதற்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.01) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ''இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
image
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.''
 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்