Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக்: கஜகஸ்தான் மல்யுத்த வீரரால் கடிபட்ட இந்திய வீரர் உடற்தகுதியோடு உள்ளதாக அறிவிப்பு

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அரையிறுதி போட்டியின்போது எதிராளியால் கடிபட்ட இந்திய வீரர் நலமாக இருப்பதாகவும் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட முழு உடல் தகுதியோடு இருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
 
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவி தாகியா, அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை எதிர்த்து விளையாடினார். அப்போது மிகவும் பின்தங்கியிருந்த இ்ந்திய வீரர் ரவி கடைசி நிமிடத்தில் அதிரடியாக எதிராளியை தரையில் சாய்த்து வெற்றியை கைப்பற்றினார். அப்போது இந்திய வீரரின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்ப அவரது கையை கஜகஸ்தான் வீரர் கடுமையாக கடித்து விட்டார்.
அப்போது வலி கடுமையாக இருந்தாலும் வெற்றியை வசப்படுத்துவதற்காக அதை இந்திய வீரர் பொறுத்துக்கொண்டார். இதனால் இந்திய வீரர் கையில் பல் குறிகளும் ஆழமாக காணப்பட்டன.
 
image
எனவே அவர் இன்று மாலை நடைபெறும் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட முழு உடல் தகுதி பெற்றுள்ளாரா என கேள்வி எழுந்தது. ஆனால் இந்திய வீரர்களுடன் உள்ள அதிகாரிகள் குழுவினர் ரவி தாகியா நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை நடைபெறும் 57 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரும் உலக சாம்பியனுமான ஜவுர் யுகெவ்-ஐ ரவி தாகியா சந்திக்க உள்ளார். இதில் வெல்லும் பட்சத்தில் தாகியா தங்கப் பதக்கம் வெல்வார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்