Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

’பாராலிம்பிக்கை ஊக்கப்படுத்துவதாக சொன்னார்’ - முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாரியப்பன்

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதல்வரை மாரியப்பான் சந்தித்த போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் இருந்துள்ளார். 

image

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மாரியப்பன் “முதல்வர் என்னை அழைத்து வாழ்த்தியது மகிழ்ச்சி. டோக்கியோவில் தங்கத்தை தவறவிட்டதில் வருத்தம் தான். முதல்வரிடம் கிளாஸ் 1 வேலை கேட்டுள்ளேன். நிச்சயம் எனது வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 

பாரா விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் ஊக்குவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். முதல்வர் அதையும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்