Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு மாநில காவல் துறை பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாரத வங்கி ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நூதன முறையில் தங்களின் கைவரிசையைக் காட்டி லட்சக் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றனர். குறிப்பாக சென்னையில் 17 ஏடிஎம்களில் ஹரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

image

சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு இதுவரை இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியானா மாநில கொள்ளையர்கள் அமீர் அர்ஷ், வீரேந்தர ராவத் மற்றும் நஜீம் உசைன் ஆகிய 3 பேரையும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சவுக்கத் அலி என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன கொள்ளை நடந்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்