Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்

ஐபிஎல் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியை வென்று கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியுள்ள நிலையில், அந்த அணியின் நிர்வாக குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐபிஎல் கோப்பை ஏழுமலை வெங்கடாசலபதி முன் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீனிவாசன். 

image

வெங்கடாசலபதி முன் ஐபிஎல் கோப்பையை வைப்பதில் பெருமை அடைகிறேன். எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75-வது வருடத்தில் கோப்பையை கைப்பற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வாங்க முடியாத நிலையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் எம்.எஸ்.தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதே போல நடந்துள்ளது. உலக கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. வெற்றி கோப்பையை முதல்வரிடம் தோனி கொடுக்க உள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். வரும் ஐபிஎல் ஏலத்தில் தோனி இடம் பெறுவாரா என்கிற கேள்விக்கு சி.எஸ்.கே இல்லாமல் எம்.எஸ் தோனி கிடையாது. எம்.எஸ் தோனி இல்லாமல் சி.எஸ்.கே கிடையாது என்றார். 

image

ஐபிஎல் ஏலத்தில் யார் யாரை தக்க வைப்போம் என்பதை பிசிசிஐ விதிமுறையை வைத்து அப்போது முடிவு செய்வோம் என்றார். டிஎன்பிஎல் குறித்த கேள்விக்கு, திறமையுள்ள வீரர்கள் டி.என்.பி.எல் மூலமாக அடையாளம் காணப்படுகிறார்கள். இது இளம் தமிழக வீரர்களை உருவாக்குவதாக தெரிவித்தார் சீனிவாசன்.

-பால வெற்றிவேல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்