Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்தமாக தண்டிக்கக் கூடாது” - பட்டாசு உற்பத்தியாளர்கள்

பட்டாசு தயாரிப்பில் ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்தமாக தண்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக நேற்று பட்டாசு உற்பத்தியாளர்கள் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்கள்.

image

அதில், சிவகாசியில் மட்டும் பட்டாசு தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு, சரிதான். ஆனால் சுற்றுச்சூழல் மாசினால் பாதிக்கப்படும் நாட்டின் நிலைமை என்ன என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

பேரியம் போன்ற ரசாயனங்களை தாங்கள் பட்டாசுகளில் அதிகமாக பயன்படுத்துவதில்லை என்றும், சேமித்துதான் வைத்திருப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியிருந்தார்கள். அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், பேரியம் போன்ற ரசாயனங்களை சேமித்து வைப்பதைகூட அனுமதிக்கப்படாது என கூறி அக்டோபர் 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்