சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, ரெட்மி பிராண்டின் கீழ் நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம். சீனாவில் வெளியான நோட் 11 5ஜி போனின் மாற்றி அமைக்கப்பட்ட வெர்ஷனாக வெளியாகிறது நோட் 11T 5ஜி.
சிறப்பம்சங்கள் என்ன?
6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் மெமரி என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனின் ஆரம்ப விலை 16,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6.6 இன்ச் ஃபுல் HD டிஸ்பிளே, மீடியாடெக் 810 பிராசஸர், ரியர் சைடில் இரண்டு கேமரா. அதில் பிரைமரி கேமரா 50 மெகாபிக்சல் மற்றும் பிராண்ட் கேமரா 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி இந்த போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளம் கொண்ட இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 12 மணி அளவில் வெர்ச்சுவல் நிகழ்வில் இந்த போன் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதையும் படிக்கலாம் : ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா? - மருத்துவ நிபுணர்கள் சொல்வதென்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்