ஆவடி அருகே திருநின்றவூரில் குடியிருப்புப் பகுதியை மழைவெள்ளம் சூழ்ந்து 6 அடி உயரம் தேங்கி நிற்பதால் 500க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலிசெய்து வெளியேறி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூரில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஈசா ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஈசா ஏரி நிரம்பி விட்டது. மேலும் ஏரிக்கு செல்லும் கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பெரியார் நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன் ஏரியின் உபரி நீரும் சேர்ந்து சுமார் 5 அடிக்கும் மேலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சென்னை: ரவுடி பேபி சூர்யாவை கைதுசெய்யக்கோரி கமிஷனர் அலுவலம் முன்பு சாலைமறியல்
குறிப்பாக பெரியார் நகர், பாரதியார் தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளுக்குள் பாம்பு புகுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அங்கிருக்கும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர். ஒருசிலர் அருகிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்