Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டறியும் சோதனை முறை - ஐசிஎம்ஆர் வடிவமைப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் திரிபான ஒமைக்ரான் தொற்றை 2 மணி நேரத்தில் கண்டறியும் சோதனை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐசிஎம்ஆர் வடிவமைத்துள்ளது.

அசாமின் திப்ருகாரில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் இதை சாதித்துக் காட்டியுள்ளது. இப்போதுள்ள சோதனை முறைகளில் ஒமைக்ரான் தொற்றை உறுதிப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் நிலையில், 2 மணி நேரத்தில் சோதனை முடிவை இதில் கண்டறியலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், நம்நாட்டிலும் இதுவரை 33 பேருக்கு அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறுகிய நேரத்தில் சோதனை முடிவை அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்