Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'சிறைகளில் சிசிடிவி பொருத்த வேண்டுமென்ற உத்தரவு பின்பற்றப்படுவதில்லை' - மத்திய அரசு

சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பின்பற்றப்படவில்லை என்பது நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது.
 
image
மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், கைதிகளின் விடுதலையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள சிறைகளின் விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்துள்ள பதிலில், சிறை நிர்வாகம் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள் இங்கே பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
அதே போல், 2019 வரை தமிழ்நாட்டுச் சிறைகளில் 67 சிசிடிவி கேமாராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பது மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் சிறைகளில் 928, கேரளாவில் 826, தெலங்கானாவில் ஆயிரத்து 61, மகாராஷ்டிராவில் ஆயிரத்து 580 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உட்பட 135 சிறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்