Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்கும் - சீனா மிரட்டல் 

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்கும் என சீனா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

சீனாவில் சிறுபான்மையின மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அலுவல் ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இதைதொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் அரசு அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்தது.

image

இந்நிலையில் தங்கள் மீது வீணாக பழிபோட்டு ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக அமெரிக்காவை கண்டித்துள்ள சீனா, போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதனைப்படிக்க...உருமாறிய கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆட்சியர்களுக்கு உத்தரவு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்