Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எழுத்துகளால் விடுதலை வேட்கையை விதைத்த மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்... சிறப்பு பகிர்வு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

மகாகவி பாரதியார் 140-ஆவது பிறந்தநாள் மற்றும் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் கொண்டாடப்படும் இத்தருணத்திலும், அவரின் தேவை அவசியமாக இருக்கிறது. அவரின் சமூக கோபம், வெந்து தணியாத காடாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அவரின் எழுத்துகள் இன்றைய தலைமுறையிடமும் தீ மூட்டிக்கொண்டுதான் இருக்கிறது. எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், விடுதலை போராட்ட வீரர் என பல பரிமாணம் கொண்ட அந்த அமர கவி, தனது " பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தை பாலித்திட வேண்டும்"என்று கனவு கண்டவர்.

image

பெண்ணடிமை கண்டு சீறி புதுமைப் பெண்ணை வடித்த "மா"கவிஞன் பாரதி. "பெண் அறிவை வளர்த்தால் வையம் பேதமையற்றிடுங் காணீர்" என அப்போதே பாடிய பாரதியார், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றார்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ" என்று எழுத்தால், எண்ணத்தால் விடுதலை வேள்விக்கு நெய் வார்த்த கவிஞர், தனது செயல்களால், சிந்தனைகளால் பெண்ணடிமைத்தனத்தை சாடினார், சமூகத்திற்கு கேள்விகளால் சாட்டையடி கொடுத்தார்.

"பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" என்று அவர் கேட்ட கேள்விக்கு, அவரின் நூற்றாண்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இதனைப்படிக்க...பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்