Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஆன்லைனில்தான் நடக்கும்’- அமைச்சர் பொன்முடி பேட்டி

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என மாணவர்களிடையே கேள்வி எழுந்திருந்தது. இது தொடர்பாக, உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை புதிய தலைமுறை சார்பாக தொடர்புக்கொண்டு பேசினோம். அப்போது, ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியே தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “செய்முறைத் தேர்வுகள் இருக்கும் என்பதால்தான் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டும். கல்லூரிகள் பிப்.1ல் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே 1, 3, 5ஆவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். எனவே யாரும் குழப்பமடைய வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

image

நேற்று முன்தினம் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநரின் மும்மொழிக் கல்வி கொள்கை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்த அவர், “தமிழகத்தில் கண்டிப்பாக இருமொழிக் கொள்கைதான் தொடரும். அதில் தமிழக அரசும், முதல்வரும் உறுதியாக இருக்கின்றனர். முதல்வர் சொன்னதுபோல, எங்களுக்கு விருப்ப மொழியாக பிறமொழி கற்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் கட்டாயத்தின்பேரில் அதை படிக்க முடியாது” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு ரத்து; அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அனுமதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்