Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'220 கோடி ரூபாய் கமிஷன்.. ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜி சிறை செல்ல நேரிடும்' - அண்ணாமலை

தமிழக அரசு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி 220 கோடி ரூபாயை கமிஷனாக பெற்றிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களில் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷனாக 220 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

மின்னுற்பத்தி திறனை குறைத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்