Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஹைதராபாத்: 7 கொரோனா நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் மரணமடைந்தனர். ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் இவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிங் கோட்டி மருத்துவமனையில் நடந்த இந்த உயிரிழப்புகள் பற்றி பேசிய அம்மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர், மருத்துவர் ஜலஜா, “ உயிரிழந்த 7 பேரும் எங்கள் மருத்துவமனையில் மிக தீவிரமான கொரோனா தொற்றினால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவே உயிரிழந்தனர்” எனத் தெரிவித்த அவர் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் அவர்கள் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே சம்பவத்தன்று கிங்கோட்டி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் டேங்கரை, வேறு மருத்துவமனைக்கு திருப்பிவிடப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்