Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக கொரோனா தடுப்பூசிகள்

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மே 7ஆம் தேதி நிலவரப்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 7 கோடியே 62லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு, மே 7ஆம் தேதி வரை 72லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை காட்டிலும் சற்று குறைந்த மக்கள் தொகைக் கொண்ட குஜராத்திற்கு, ஒரு கோடியே 39லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதே போல 6 கோடியே 66 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கர்நாடகாவிற்கு ஒரு கோடியே 6 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பியுள்ளனர். தமிழகத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாக மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழகத்தைக் காட்டிலும் இரு மடங்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது, மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்