Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"கொரோனா போரில் அடுத்த 125 நாட்கள் மிக முக்கியமானவை" - ஓர் எச்சரிக்கை

நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று நிதி ஆயோக் உறுப்பினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுத் தலைவருமான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய வி.கே.பால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதாக கூறினார். அதேபோன்று பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் குறையும் விகிதம் படிப்படியாக சரிந்து வருவதாகவும், இது எச்சரிக்கை மணி என்றும் பால் குறிப்பிட்டார். அடுத்த 100 முதல் 125 நாட்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலக்கட்டம் என அவர் தெரிவித்தார்.

I.C.M.R ஆய்வின்படி இரண்டு டோஸ் தடுப்பூசி 95 சதவிகித கொரோனா மரணங்களை தவிர்த்துள்ளதாகவும் ஒரு டோஸ் தடுப்பூசி 82 சதவிகிதம் கொரோனா உயிரிழப்புகளை தவிர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜூலை மாதத்துக்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்குடன் முன்னேறி வருவதாக வி.கே.பால் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்