Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராசிபுரம்: மரத்தின்மேல் ஏறி படிக்கும் மாணவர்கள்; செல்போன் டவர் அமைக்க அமைச்சர் உறுதி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமங்களில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பயில வசதியாக விரைவில் செல்போன் கோபுரம் நிறுவப்படும் என அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

செல்போன் சிக்னல் கிடைப்பதற்காக ராசிபுரம் அருகே உள்ள பெரப்பன்சோலை கிராமத்தில் அபாயகரமான முறையில் மரத்தின் மீது அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பயிலும் செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இந்நிலையில், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் மதிவேந்தனிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர், மாணவர்கள் வசதிக்காக செல்போன் கோபுரம் அமைப்பது பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி வருவதாக தெரிவித்தார். மேலும் சிக்னலுக்காக தற்காலிக நடமாடும் செல்போன் கோபுரம் அமைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் நிரந்தர செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்