Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உலகெங்கும் மின் வாகனங்கள் புரோமோட் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வெகு விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (இ-ஸ்கூட்டர்). இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவும் இப்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம். 

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள உற்பத்தி கூடத்தில் இருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். 

image

  • மொபைல் அப்ளிகேஷன் மூலமாக இந்த இ-ஸ்கூட்டரை ஆன் மற்றும் ஆப் செய்ய முடியும் என தெரிகிறது. இந்த வாகனத்தில் சாவி இருக்காது என தெரிகிறது. 
  • எர்கானாமிக் சீட்டிங்குடன் இந்த வாகனம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • 50 சதவிகிதம் சார்ஜ் செய்தாலே 75 கிலோ மீட்டர் வரை இதில் பயணிக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை ஓலா இன்னும் அறிவிக்கவில்லை. 
  • ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை இதில் பயணிக்கலாம். 
  • இதன் முகப்பு விளக்கு LED லைட்டில் மிளிரும் வகையில் இருக்குமாம். 
  • ஓலா நிறுவனத்தில் வலைதளத்தில் வாகனத்தை 499 ரூபாய்க்கு முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு அந்த தொகை வாகனம் டெலிவரி செய்யும் போது திரும்ப கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்