Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

’தளபதியுடன் தல’ : படப்பிடிப்பு தளத்தில் விஜய் - தோனி சந்திப்பு - வைரல் ஆகும் படங்கள்

சென்னையில் நடந்துவரும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள இருவரது ரசிகர்கள் ‘தளபதி - தல’ சந்திப்பு எனக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.

image

இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது.

image

மீண்டும் தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் நடிகர் விஜய்.

image

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல சென்னை வந்துள்ள தோனி, ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடைபெறும் கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர படப்பிடிப்புக்காக கலந்துகொண்டுள்ளார். இந்த சமயத்தில், விஜய்யை தோனி உற்சாகமுடன் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றன.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்