Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

’ஒமைக்ரானை சாதாரணமாக நினைக்க வேண்டாம்’- மத்திய சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

ஒமைக்ரானை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், 300 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருவதாகவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், "மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது என்றார். மேலும், கொரோனா பரவும் வேகம் டிசம்பர் 30-ஆம் தேதி 1.1 சதவிகிதமாக இருந்தது, புதன்கிழமை 11.05 சதவிகிதமாக அதிகரித்துள்ளது" என்றார்.

image

நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 5 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் லாவ் அகர்வால் தெரிவித்தார். லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமைக்ரானை, வழக்கமான சளி போன்று சாதாராணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி: இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்