Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்பு

நாட்டின் 14-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் ஜகதீப் தன்கர்

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதனை முன்னிட்டு கடந்த 6ந் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் பதவியேற்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவராகவும் அவர் செயல்படுவார்.

image

71 வயதான ஜக்தீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். வழக்கறிஞருக்குப் படித்த இவர், அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது சந்திரசேகர் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இதையும் படிக்க: நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு விவகாரம்... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்