Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”கொரோனா பணியில் முழுமையாக ஒப்படையுங்கள்”- தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்கவேண்டும் என மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா 2ஆம் அலை மிகவும் மோசமானதாக இருப்பதால், தனியார் மருத்துவமனைகள் கொரோனா பணியில் தங்களை முழுமையாக ஒப்படைக்க முன்வரவேண்டும் என மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளைவிட கூடுதலாக படுக்கைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும்; உயிர் பாதுகாப்புக்கு அவசியமற்ற அறுவை சிகிச்சைக்கு ஒதுக்காமல் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தில் சலுகை அளிக்கவேண்டும் எனவும், ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணைகாட்டி அவர்கள் உயிரை செலவின்றி மீட்டுத்தர முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் படுக்கை விவரங்களை தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் வெளியிடவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

image

நோய்ப்பரவலைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களை நலப்படுத்துவது ஆகிய 2 நோக்கங்களில் அரசு செயல்படுகிறது; எனவே மருத்துவ அவசர நிலை என சொல்லக்கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையம் (War Room) தொடங்க தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கட்டளை மையத்தில் ஆக்சிஜன் தேவை, படுக்கைகளின் இருப்பு, தடுப்பூசி குறித்து தெரிந்துகொள்ள கட்டளை மையம் உதவும் எனவும். கட்டளை மையத்தில் உள்ள தகவல்கள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமையவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார். போர்க்காலத்தில் செயல்படுவதை போல நம் மருத்துவர்கள் செயல்பட்டு சேவையாற்றுவார்கள் என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

<iframe src="https://ift.tt/3tmypLd" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்